மாவட்ட செய்திகள்

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் சாவு வாலிபர் படுகாயம் + "||" + Motorcycle-moped collision near Namakkal; Engineer Death Waller Injury

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் சாவு வாலிபர் படுகாயம்

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் சாவு வாலிபர் படுகாயம்
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ராமுடையானூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). என்ஜினீயரான இவர் கார் வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இவர் நாமக்கல் அருகே உள்ள அணியாபுரம்புதூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட உறவினரை பார்க்க சென்றார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த கோகுல் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நோக்கி வந்தார்.


கோகுல் மோட்டார் சைக்கிளை ஓட்ட, ராஜேஸ் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். நாமக்கல்-மோகனூர் சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே வந்தபோது வகுரம்பட்டியை சேர்ந்த காளியண்ணன் என்பவர் மொபட்டில் சாலையின் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராத விதமாக மோதின.

விபத்தில் சாவு

இந்த விபத்தில் ராஜேஷ், கோகுல் ஆகிய இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி என்ஜினீயர் ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதல்: தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி
வேப்பூர் அருகே கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள்.
2. உசிலம்பட்டி அருகே லாரிகள் மோதல்; 2 பேர் பலி 3 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. பெரியபாளையத்தில் மின்கம்பத்தில் வேன் மோதல்; 11 பெண்கள் படுகாயம்
பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 11 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
4. கார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது
கர்நாடகாவில் கார் மரத்தில் மோதியதில் இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது.
5. சீனாவுடனான மோதல் போக்கு: டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் மாறுமா...?
சீனாவுடனான மோதல் போக்கு டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் கண்டிப்பாக மாறும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.