மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் + "||" + Anna Birthday Celebration in Namakkal District

நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாமக்கல்,

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளையொட்டி நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி, மாநில மகளிர் அணி இணை செயலாளர் ராணி , முன்னாள் நகர பொறுப்பாளர் மணிமாறன் ,முன்னாள் நகர செயலாளர் எல்.ஜி.பி.செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தமிழ்செல்வன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இதேபோல் நாமக்கல் காவேரிநகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் தலைமை தாங்கினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட இலக்கிய அணி புரவலர் சுப்பிரமணியம், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், சுகுமார், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சத்தியபாபு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் அண்ணாத்துரை, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்

பள்ளிப்பாளையம் நகரம், ஒன்றியம் மற்றும் ஆலாம்பாளையம், படைவீடு அ.தி.மு.க. சார்பில் ஆவாரங்காடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் ஜெயலலிதா பேரவை செயலாளர் சுப்பிரமணியம், வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், ஆலம்பாளையம் நிர்வாகி தனசேகரன், படைவீடு நிர்வாகி ஜெகநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன், புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரதுணை செயலாளர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.

பரமத்திவேலூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவில் பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் பொன்னிமணி என்ற சுப்ரமணியம், பொன்னிவேலு என்ற வேலுச்சாமி, நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ராஜமாணிக்கம், அரசு சிறப்பு வக்கீல் லோகநாதன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
2. தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
3. பக்தர்கள் அனுமதி இன்றி பிள்ளையார்பட்டியில் எளிமையாக நடந்த விநாயகர் சதுர்த்தி விழா
கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடைபெற்றது.
4. பொது இடங்களில் சிலை வைக்க தடை: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
பொது இடங்களில் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாடினர்.
5. சதுர்த்தி விழா ஊர்வல தடையால் விநாயகர் சிலைகள் விற்பனை பாதிப்பு
சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.