மாவட்ட செய்திகள்

சேலத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + "||" + Political parties pay homage to Anna statue in Salem by wearing garlands

சேலத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சேலத்தில் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
சேலத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலை, படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சேலம்,

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி நேற்று சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. சார்பில் கட்சியின் மாநகர் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ஆர்.ஆர்.சேகரன், முன்னாள் மேயர் சவுண்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.முக.-ம.தி.மு.க.

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் கலையமுதன் தலைமையில் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் சாரதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்ச்சங்கம்

அண்ணா திராவிடர் கழகத்தின் சார்பில் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கே.வி.கே.மோகன் தலைமையில் சேலத்தில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார், மாணவரணி செயலாளர் ஜீவா, பிரபு, சண்முக சுந்தரம், முரளி, சீனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேலம் தமிழ்ச்சங்கம் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி சங்க அலுவலகத்தில் தலைவர் சீனி.துரைசாமி முன்னிலையில் அண்ணா உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சங்கரன், துணைச்செயலாளர் பன்னீர்செல்வம், மனோகரன், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலையை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக நேற்று அவர்கள் திட்டுவிளை பஸ் நிலையம் முன் திரண்டனர்.
2. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகை
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் அலுவலகத்தை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
3. மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையம் சந்தை முக்கில் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. தென்காசி, புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி, புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.