மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது + "||" + Former MLA protests against laying of gas pipeline on agricultural land 62 people were arrested, including

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி,

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் ராயனம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.


விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்காக ஒருவருடைய நிலத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

62 பேர் கைது

போராட்டத்துக்காக முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி தலைமையில் விவசாய சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோரும் அப்பகுதியில் கூடினர். ஆனால் காத்திருப்பு போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, சங்ககிரி துணை சூப்பிரண்டு ரமேஷ், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி உள்பட 62 பேரை கைது செய்து வேனில் ஏற்றி கொங்கணாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பொருள் பாதுகாப்பு இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
2. மல்லூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது திடுக்கிடும் தகவல்கள்
மல்லூர் அருகே மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட நகலை எரித்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம் 16 பேர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்திய காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. கள்ளக்காதலை கைவிடாததால் பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்த பெயிண்டர் கைது
வேடசந்தூர் அருகே, கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
5. திருமணம் செய்து வைக்காததால் அம்மிக்குழவியை தலையில் போட்டு விவசாயியை கொன்ற தம்பி கைது
பட்டுக்கோட்டை அருகே திருமணம் செய்து வைக்காததால் அம்மிக்குழவியை தலையில் போட்டு விவசாயியை கொன்ற அவரது தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...