மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை + "||" + Fever test at Dindigul railway station with modern scanner for passengers

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 10 சிறப்பு ரெயில்கள் நின்று செல்கின்றன.


இந்த ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 2 டிக்கெட் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே, பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தொடக்கத்தில் வழக்கமான தெர்மல்ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனால் ரெயில்வே அதிகாரிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதை தவிர்க்கும் வகையில் தற்போது நவீன வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெயில்வே அதிகாரிகள் அமர்வதற்கு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் முதலாவது நடைமேடைக்குள் நுழையும் இடத்தில் கண்காணிப்பு கேமரா வடிவிலான நவீன ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த கருவி மூலம் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த கருவி பயணிகளை ஸ்கேன் செய்து, உடல்வெப்பநிலையை கணக்கிட்டு, பயணியின் புகைப்படத்துடன் கணினிக்கு அனுப்பி வைக்கிறது. அதை ரெயில்வே அதிகாரிகள் கணினியில் பதிவு செய்வதோடு, டிக்கெட்டை வாங்கி சோதனை செய்துவிட்டு பயணிகளை உள்ளே அனுமதித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரிசோதனை எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது
புதுவையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
2. கருங்கல்பாளையம், பெரியசேமூரில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியது மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கருங்கல்பாளையம், பெரியசேமூரில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட தொடங்கின. அங்கு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.
3. மராட்டியத்தில் ஒரேநாளில் 23,816 பேருக்கு கொரோனா மேலும் 325 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் ஒரே நாளில் 23 ஆயிரத்து 816 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 325 பேர் உயிரிழந்தனர்.
4. குணமடைவோர் அதிகரிப்பு: ஒரே நாளில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
புதுவையில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
5. தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி நெல்லையில் புதிதாக 81 பேருக்கு தொற்று
தூத்துக்குடி, தென்காசியில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியானார்கள். நெல்லையில் புதிதாக 81 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.