சென்னிமலை அருகே கொடுமணல் அகழாய்வில் 3 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு - தொழிற்கூடங்கள் இருந்ததற்கான ஆதாரமும் கிடைத்தது
சென்னிமலை அருகே நடந்து வரும் அகழாய்வு பணியில் 3 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ளது கொடுமணல் கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங் கள் இருந்ததால் பல்வேறு ஆய்வுக்குழுக்கள் மூலம் ஆய்வுகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில் உதவி தொல்லியலாளர் நந்தகுமார், தொல்லியல் வல்லுனர் சுப்பிரமணியம் ஆகியோர் மேற்பார்வையில் கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக 8-வது அகழாய்வு பணி நடந்து வருகிறது.
இதில், கொடுமணலில் கல்லங்காடு என்ற இடத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியின் அருகில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்கூடங்கள் இருந்ததற்கான ஆதாரங் களும் கிடைத்தது. மேலும் வெள்ளி மற்றும் செம்பு நாணயங்கள், சூது பவள கல்மணி கள், வாள், சிறிய கத்திகள், மண் குவளை, மண் ஜாடிகள் உள்பட ஏராளமான பொருட்களும் கிடைத்தது.
தற்போது கல்லறைகள் இருந்த பகுதியில் சுமார் 6 அடி ஆழத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு நீண்ட கால்வாய் போல் தோண்டி ஆய்வு செய்தனர். அதில் பெரிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதில் 95 செ.மீ. உயரம் மற்றும் 65 செ.மீ. அகலத்தில் இருந்த ஒரு முதுமக்கள் தாழியை நேற்று முன்தினம் புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.ராஜன் தலைமையில், கீழடி அகழாய்வு துறையின் துணை இயக்குனர் சிவானந்தம் மற்றும் கீழடி அகழாய்வாளர் பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு முதுமக்கள் தாழியில் மண் இருந்தது. அதனை அகற்றிய போது மனித மண்டை ஓடு, துண்டு, துண்டாக கிடந்த கை, கால் எலும்பு மற்றும் முதுகுத்தண்டுவட எலும்பு ஆகியவை இருந்தன. இதில் சிலவற்றை ஆய்வுக்குழுவினர் பத்திரப் படுத்தி மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்து அகழாய்வு துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தினத்தந்தி நிருபருக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கல்லறைகள் இருந்த பகுதியை தோண்டி ஆய்வு செய்த போது ஏற்கனவே சிறிய அளவிலான ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற் போதுதான் பெரிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு முதுமக்கள் தாழியை ஆய்வு செய்த போது பானைக்குள் இறந்தவரின் எலும்புகள் இருந்தது. இந்த எலும்புகள் ஆணா அல்லது பெண்ணா, எந்த வயதுப்பிரிவினர் என்பதை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் முழுமையாக ஆய்வு செய்ய மதுரைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது.
தொடர்ந்து மற்ற முதுமக்கள் தாழிகளிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த ஆய்வில் தற்போதுதான் தொழிற் கூடங்கள் இருந்ததற்கான முழு அடையா ளமாக 3 வரிசைகளாக செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் தான் பளிங்கு கற்களால் ஆன அணி கலன்கள் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு அதிகமான கல்மணிகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைத்துள்ளது. பழுப்பு சாயம் பூசப்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓட்டின்மேல் தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டு இருந்தன. சம்பன் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட சிறிய குவளை தலைகீழாக இருந்த நிலையில் அகழாய்வு குழியில் கண்டெடுக்கப் பட்டுள் ளது. இதேபோல் சுமார் 100 தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக் கப்பட்ட மண்பாண்டங் கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இதில் ஏகன் என்ற பெயர் பொறித்த மண் பாண்டங்களின் ஓடுகள் இரண்டு கிடைத்துள்ளன. இங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்களில் அதிகமானவை பெயர்சொற்களாக கிடைத்துள்ளன. இவை சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்த அகழாய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அகழாய்வு துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் கூறினார்.

Related Tags :
Next Story