மாவட்ட செய்திகள்

ஜெயா பச்சன் எம்.பி. மீது நடிகை கங்கனா மீண்டும் விமர்சனம் + "||" + Jaya Bachchan MP On Actress Kangana review again

ஜெயா பச்சன் எம்.பி. மீது நடிகை கங்கனா மீண்டும் விமர்சனம்

ஜெயா பச்சன் எம்.பி. மீது நடிகை கங்கனா மீண்டும் விமர்சனம்
ஜெயா பச்சன் எம்.பி. மீது நடிகை கங்கனா மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.
மும்பை,

இந்திப்பட உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக நடிகை கங்கனா ரணாவத் கூறியதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமாஜ்வாடி கட்சி எம்.பி. நடிகை ஜெயா பச்சன் மறைமுகமாக விமர்சித்தார். அப்போது, “தட்டில் உணவு ஊட்டிய கையை கடிக்கலாமா?” என்று அவர் கேட்டார்.


இதற்காக ஜெயா பச்சனுக்கு நேற்று முன்தினம் ‘டுவிட்டர்’ மூலம் கங்கனா கேள்வி விடுத்தார். இந்நிலையில், நேற்றும் நடிகை கங்கனா ‘டுவிட்டர்’ மூலம் ஜெயா பச்சனை விமர்சித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயாஜி, எந்த தட்டை சொல்கிறீர்கள்? ஒரு தட்டு கொடுக்கப்பட்டது. அதில், 2 நிமிட கதாபாத்திரம், கவர்ச்சி நடனங்கள், காதல் காட்சி ஆகியவை அளிக்கப்பட்டன. அதுவும் கதாநாயகனுடன் தனிமையில் இருந்த பிறகே கொடுக்கப்பட்டது.

நான் திரையுலகுக்கு பெண்ணியத்தை கற்றுக்கொடுத்தேன். தேசபக்தி படங்களால் அலங்கரித்தேன். இது எனது சொந்த தட்டு, உங்கள் தட்டு அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், நடிகை கங்கனாவுக்கு நடிகை ஸ்வரா பாஸ்கர், டைரக்டர் அமன்கிரிடா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை