மாவட்ட செய்திகள்

வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை கரூரில் பரிதாபம் + "||" + Textile with information on WhatsApp Corporate in Karur commits suicide by hanging

வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை கரூரில் பரிதாபம்

வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை கரூரில் பரிதாபம்
கரூரில் வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவித்து டெக்ஸ்டைல் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,

கரூர் வெண்ணைமலையை சேர்ந்தவர் ரமேஷ் வயது (28) இவர் கரூர் ராயனூரை சேர்ந்த நந்தினி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதிகள் கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று நந்தினி வேலைக்குச் சென்றுவிட, ரமேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.


இந்நிலையில் ரமேஷ் மது அருந்தி விட்டு தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

போலீசார் விசாரணை

இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் தாந்தோனிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரமேஷ் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊத்தங்கரை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஊத்தங்கரை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார்.
2. வடமதுரை அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
வடமதுரை அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
3. சேலத்தில் பரிதாபம்: குடிசை இடிந்து தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்
சேலத்தில் குடிசை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. ஆன்லைன் பாடம் புரியாததால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
ஆன்லைனில் நடத்தும் பாடம் புரியாததால் விரக்தி அடைந்த 9-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. வறுமையின் கொடுமையால் தற்கொலை செய்த தாய்-மகள் உடலை வாங்க ஆளில்லாத சோகம்
வறுமையின் கொடுமையால் தற்கொலை செய்த தாய்-மகள் உடலை வாங்க ஆளில்லாததால், அந்த உடல்களை போலீசார் அடக்கம் செய்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.