பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடைபெற்றது


பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடைபெற்றது
x
தினத்தந்தி 17 Sept 2020 6:39 AM IST (Updated: 17 Sept 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக்கோரி திருவாரூரில் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேல்நிலை நீர்்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.4 ஆயிரமும், தூய்மை காவலர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 600-மும் ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். கொரோனா பாதித்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பும், ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பில் இறந்த தொழிலாளர் குடும்்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சம்பளம்

ஆர்ப்பாட்டத்துக்கு உள்ளாட்சி ஊழியர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் முணியான்டி, மாவட்ட பொருளாளர் ஞானசேகரன், சங்க நிர்வாகிகள் காமராஜ், தனுஷ்கோடி, பன்னீர்செல்வம், யுவராணி, பாமா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.

Next Story