மாவட்ட செய்திகள்

குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல் + "||" + Transfer to 9 officers in Kumari, Promotion Collector Information

குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்

குமரியில் 9 அதிகாரிகளுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 9 அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,

விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய ரியாஸ் அகமது, கல்குளம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்று இடமாற்றப்பட்டுள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய சொர்ணபிரதாபன் தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) பதவி உயர்த்தப்பட்டார்.


அகஸ்தீஸ்வரம் வட்டம் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றிய கந்தசாமி, தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) பணி மாற்றம் செய்யப்பட்டார். இதேபோல் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த முருகன், மண்டல துணை தாசில்தாராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக தலைமை உதவியாளரான சரஸ்வதி, தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) இருந்த ஆறுமுகம் தற்போது தோவாளை வட்டம் மண்டல துணை தாசில்தாராகவும், தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) இருந்த குழந்தைராணி நாச்சியார் தற்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலக தலைமை உதவியாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

துணை தாசில்தாராக பதவி உயர்வு

நாகர்கோவிலில் உள்ள உதவி ஆணையர்(ஆயம்) அலுவலத்தில் 2-ம் நிலை கணக்கராக பணியாற்றிய பாலதீபா தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை உதவியாளராக(எல் பிரிவு) பதவி உயர்வு பெற்றுள்ளார். இதேபோல் அகஸ்தீஸ்வரம் வட்டம் தாசில்தார் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த தனலட்சுமி பதவி உயர்வின் மூலம் தனித்துணை தாசில்தாராக (தேர்தல்) நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க நீலகிரியில் 280 நிவாரண முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 280 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார்.
2. வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 33 நிவாரண குழுக்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
பருவமழையை எதிர்கொள்ள மதுரை மாவட்டத்தில் 33 நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
3. அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திண்டுக்கல்லில் கலெக்டர் ஆய்வு
அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
5. வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.