மாவட்ட செய்திகள்

நீட் விவகாரத்தில் அவருடைய கருத்து ஏற்புடையது நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் சீமான் பேட்டி + "||" + His opinion on the NEET affair is appropriate and everyone should be supportive of actor Surya Seaman interview

நீட் விவகாரத்தில் அவருடைய கருத்து ஏற்புடையது நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் சீமான் பேட்டி

நீட் விவகாரத்தில் அவருடைய கருத்து ஏற்புடையது நடிகர் சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் சீமான் பேட்டி
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பூந்தமல்லி,

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவரது வீட்டின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காவிரி பிரச்சினைக்காக உயிர்நீத்த விக்னேசு உருவப்படத்துக்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

மேகதாது அணை

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்காது. கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜனதா ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது கர்நாடக மக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இவர்கள் அந்தந்த மாநில மக்களின் உணர்வுக்கு ஏற்ப அரசியல் செய்வார்கள். ஆனால் எங்களை இந்திய உணர்வோடு இருக்க சொல்வார்கள். இங்குதான் உள்ளது ஆபத்து.

நீட் தேர்வை எழுத மாட்டோம் என போராடி மாணவர்கள் வெளியே வர முடியாது. வேறு வழியில்லாமல் எழுதுகிறார்கள். இந்தியை இந்தியாவிலேயே எதிர்த்த மாநிலம் தமிழ்நாடுதான்.

சூர்யாவுக்கு ஆதரவு

நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா கூறிய கருத்து ஏற்புடையது. சூர்யாவுக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது கருத்தை ஆதரித்த நீதிபதிகளுக்கு நன்றி. தமிழனுக்கு இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசை வந்து விடக்கூடாது என்பதுபோல், நமது பிள்ளைகள் மருத்துவம் பார்க்கக்கூடாதா? ஆசை இருக்கக்கூடாதா?.

கடுமையான சட்டப்போராட்டம் நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வாகும். நீட் தேர்வு தேவையில்லை. வலுவான ஆட்சி உருவானால் மட்டுமே இது சரியாகும். இன்னும் எத்தனை உயிர்கள் போனாலும் இவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை அமைச்சர் தங்கமணி பேட்டி
வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
2. வேளாண்மை சட்ட திருத்தத்துக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நாகையில் முத்தரசன் பேட்டி
வேளாண்மை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று நாகையில் முத்தரசன் கூறினார்.
3. நானும் ஒரு விவசாயியே; குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும்: ராணுவ மந்திரி பேட்டி
நானும் ஒரு விவசாயி என்றும் நாட்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்றும் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேட்டியில் கூறியுள்ளார்.
4. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு தேவையில்லை சரத்குமார் பேட்டி
தமிழகத்தில் ‘நீட்‘ தேர்வு தேவையில்லை, என்று சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.
5. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...