கீழ்பென்னாத்தூர் அருகே, பூட்டிய வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை


கீழ்பென்னாத்தூர் அருகே, பூட்டிய வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 17 Sept 2020 2:45 PM IST (Updated: 17 Sept 2020 3:06 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் அருகே பூட்டிய வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

கீழ்பென்னாத்தூர்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சம்பந்தநூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி, மகனுடன் வீட்டை பூட்டிக்விட்டு நிலத்தில் உள்ள கரும்பு வயலில் களை எடுக்கும் பணிக்கு சென்றிருந்தார். பின்னர் தண்டபாணி மீண்டும் குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டிருந்ததது. அதிலிருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ 1 லட்சத்து 60ஆயிரம் திருட்டு போயிருப்பதை கண்டறிந்தார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசில் தண்டபாணி புகார் அளித்தார். அதன்பேரில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் திருவண்ணாமலையிலிருந்து கைரேகை நிபுணர் மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை கைரேகை நிபுணர் பதிவு செய்தார். அதன் அடிப்படையில் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் வரை இருக்கும் என கருதப்படுகிறது.

Next Story