ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: போலீசார் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் இறந்தாரா? தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்


ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு: போலீசார் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் இறந்தாரா? தமிழக அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 17 Sept 2020 7:11 PM IST (Updated: 17 Sept 2020 7:11 PM IST)
t-max-icont-min-icon

போலீசார் தாக்கியதால் ஆட்டோ டிரைவர் இறந்தாரா? என்பது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது மகன் குமரேசன். ஆட்டோ டிரைவர். அவர் கடந்த ஜூன் மாதம் திடீரென ரத்த வாந்தி எடுத்தார். இதனால் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். அப்போது அவரிடம் விசாரித்தபோது இடப்பிரச்சினை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து அவரும், போலீஸ்காரர் குமார் என்பவரும் கடுமையாக தாக்கியதாகவும் எங்களிடம் கூறினார்.

இதில் அவரது உடலில் பல்வேறு பாகங்கள் கடும் பாதிப்பு அடைந்தன. சிறுநீரகம், நுரையீரல் மற்றும் மர்ம உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த எனது மகன் ஜூன் மாதம் 28-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்தான் எனது மகனின் இறப்புக்கு காரணம். இதனால் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் பெற்றுத்தருவதாகவும் கூறினர். ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

எனது மகன் இறப்பிற்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனின் மருத்துவ அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியை இழப்பீடாக பெற்றுத்தர வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், எங்களுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், போலீசார் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அர

Next Story