பிறந்தநாள் விழா: பெரியார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை
பிறந்தநாளையொட்டி பெரியார் சிலைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி,
புதுவை அரசு சார்பில் நேற்று பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள பெரியார் சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ.வும் கலந்துகொண்டு மாலை அணிவித்தார்.
அ.தி.மு.க.வினர் சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, வையாபுரி மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், திராவிடமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு மாநில தி.மு.க.வினர் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பலராமன், பொருளாளர் செந்தில்குமார், இளைஞர் அணி காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் தலைமையில் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.ம.மு.க. மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. யூ.சி.ஆறுமுகம், துணை செயலாளர் விமலாஸ்ரீ, பொருளாளர் வீரப்பன், நிர்வாகிகள் பாவாடை, வி.கே.சாமி, பாஸ்கர், ஜெயபால், காமாட்சி, டாக்டர் சிலம்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ம.தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் கபிரியேல் தலைமையிலும், திராவிடர் கழகத்தினர் மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையிலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆனந்த் தலைமையிலும், மாணவர் கூட்டமைப்பினர் நிறுவனர் சாமிநாதன் தலைமையிலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு சமூக அமைப்புகள் சார்பிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி அரசு சார்பில் காரைக்காலில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் சிலைக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், சப்-கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் அரசு அதிகாரிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஏம்பலம் தொகுதி தி.மு.க. சார்பில் கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் பெரியார் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். பொதுமக்களுக்கு, பெரியாரின் கருஞ்சட்டை படை புத்தகம் வழங்கப்பட்டது. விழாவில் மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாநில மீனவர் அணி அமைப்பாளர் தேவநாதன், தொகுதி அவைத்தலைவர் இளம்பரிதி, சரவணகுமார், விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சரவணன் நன்றி கூறினார். இதேபோல் பாகூர் பகுதியிலும் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரியாங்குப்பம் சமூக அமைப்புகள் சார்பில் ராதாகிருஷ்ணன் நகரில் பெரியார் சதுக்கத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமையிலும், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அமைப்பாளர் தீனா தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story