கோட்டூர் அருகே, தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகும் அபாயம் விவசாயிகள் வேதனை


கோட்டூர் அருகே, தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகும் அபாயம் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 18 Sep 2020 1:57 AM GMT (Updated: 18 Sep 2020 1:57 AM GMT)

கோட்டூர் அருகே தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகும் அபாய நிலை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய தண்ணீரின்றி விவசாய பணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

கோட்டூர் அருகே களப்பால், குறிச்சிமுலை, திருக்களார் ஆகிய ஊராட்சிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். தற்போதைய பருவ பயிரில் களைக்கொல்லி தெளித்து, 3 நாட்கள் கழித்து தண்ணீர் பாய்ச்சினால் களைகள் அழிந்து பயிர்கள் வளரும்.

வேதனையில் விவசாயிகள்

பின்னர் உரம் போட்டு மீதம் உள்ள களைகளை எடுப்பது போன்ற பணிகள் தீவிரமாகும். ஆனால் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகள் முற்றிலும் மூடங்கி போயுள்ளது. தண்ணீர் வரும் என்று நம்பி களைக்கொல்லி தெளித்தவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும் பயிர்கள் கருகும் அபாய நிலையும் உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

எனவே விவசாயிகளின் நிலையை உணர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான சாளுவைாறு, பொண்ணுக்கொண்டான் ஆகிய ஆறுகளில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என கோட்டூர் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story