காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கொரோனாவால் இறந்த மின் வாரிய தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக தன்னிச்சையான உத்தரவு பிறப்பிக்க கூடாது. துணை மின் நிலையங்களை குத்தகை மற்றம் ஒப்பந்த ஊழியர் என்ற பெயரில் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
ரத்து செய்த சரண்டர் விடுப்பை உடனே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மின்வாரிய தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பொறியாளர் சங்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் சம்பத்குமார் தலைமை தாங்கினார்.
தொ.மு.ச. திட்ட செயலாளர் ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். இதில் சி.ஜ.டி.யூ. திட்ட செயலாளர் ராஜேந்திரன், ஐக்கிய சங்க திட்ட செயலாளர் செந்தில்குமார், நிர்வாகி தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story