கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 5 பேரை பிடித்து விசாரணை


கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 5 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 18 Sept 2020 8:36 AM IST (Updated: 18 Sept 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 5 பேரை பிடித்து விசாரணை.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 35). தனியார் பள்ளி பஸ் டிரைவர். கெலமங்கலம் ஒன்றிய பா.ஜனதா இளைஞர் அணி தலைவராக இருந்து வந்தார். கடந்த 15-ந் தேதி இரவு அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அதில் குந்துமாரனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் ஒருவர் நண்பருடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதும், அப்போது மற்றொரு தரப்பினர் வந்து தகராறு செய்ததும், இதை ரங்கநாதன் விலக்கி விட்டதும் தெரிய வந்தது. இதன் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போத்தசந்திரத்தைச் சேர்ந்த தமிழரசன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 5 பேர் தற்போது போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களிடம் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, இந்த கொலையில் 9 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. குற்றவாளிகள் ஒரிரு நாட்களில் பிடிபடுவார்கள். அதன் பிறகே கொலைக்கான முழு காரணமும் தெரிய வரும் என்றனர்.

Next Story