தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து திருவாரூரில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். 150 ரெயில்கள், சரக்கு ரெயில்களை தனியாருக்கு தரும் முடிவை வாபஸ் பெற வேண்டும். ரெயில்வே ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என நிர்பந்தப்படுத்து கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி கோட்ட தலைவர் மணிவண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story