திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகைதந்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வெள்ளி வீரவாள் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன் வழங்கி வரவேற்றார்


திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகைதந்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வெள்ளி வீரவாள் - மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன் வழங்கி வரவேற்றார்
x
தினத்தந்தி 19 Sept 2020 11:30 AM IST (Updated: 19 Sept 2020 11:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகைதந்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு மாவட்ட எல்லையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது வெள்ளிவீரவாள் பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர், 

தி.மு.க. பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்று கொண்ட அவர் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன், காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்தில் இருந்து பட்டாசு வெடித்து அதரவாளர்களுடன் 25 கார்களில் அவரை அழைத்து சென்று, திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தார்.

பின்னர் வாணியம்பாடியில் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு, திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன் வெள்ளி வீரவாள் வழங்கியும், ரோஜாப்பூ மாலை அணிவித்தும் வாழ்த்து பெற்றார்.

பின்னர் டி.கே.மோகன் கூறுகையில் வேலூர் ஒருகினைந்த மாவட்டத்தை சேர்ந்த முத்த தலைவர் துரைமுருகன் தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி எற்றது மிகுந்த மிகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட மாணவரணி சார்பில் வாழ்த்துக்களை பெற்றோம். சிறப்பாக செயல்பட எங்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார் எனகூறினார்.

மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் சி.எம்.சங்கர் , மாவட்ட சிறுபான்மை நல உரிமைப்பிரிவு அமைப்பாளர் எம்.எஸ்.சவுத்அகமத், முன்னாள் நகர அவைத்தலைவர் சி.ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் டி.சி.கார்த்திக், பி .வி.பிரேம்குமார், எஸ்.வாசுதேவன், பி.கார்த்திக், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் வக்கீல் சுரேஷ்குமார், டி.பெருமாள், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் டி.ரமேஷ், தயாளன், எம்.மணிகண்டன், டி.சரவணன் எஸ்.செல்வம், டி.கே.தியாகு, ஏ.எஸ்.சபியுல்லா, எல்.ராஜன், கலை கே.ஆனந்தன், குட்டி சுந்தர், முரளி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Next Story