பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழிபாடு
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தனது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தனது 68-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் யானை தெய்வானை ஆசீர்வாதம் செய்தது. பின்னர், வீரபாண்டியன்பட்டினம் புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்திலும், நாசரேத் தூய யோவான் பேராலயத்திலும் வழிபாடு செய்தார். தொடர்ந்து காயல்பட்டினம் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகை செய்தார். பின்னர், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் தனது பிறந்தநாள் ‘கேக்‘ வெட்டினார்.
நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பிரம்மசக்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், நவீன் குமார், பாலசிங், இசக்கி பாண்டி, ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ், நகர செயலாளர்கள் ரவிசெல்வகுமார், முத்து, வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சி கழக செயலாளர் ஆனந்த் ரோட்ரிகோ, வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து துணை தலைவர் ஜெகதீஸ் ராயன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் மாமல்லன், முன்னாள் கவுன்சிலர்கள் சுதாகர், கோமதிநாயகம், சுகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story