மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு + "||" + In TamilNadu ADMK Will rule again Minister Rajalakshmi speech

தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு

தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் அமைச்சர் ராஜலட்சுமி பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக் கும் என்று அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.
வாசுதேவநல்லூர்,

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சுப்பிரமணியபுரம் தனியார் மண்டபத்தில் நடந்தது. வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா முன்னிலை வகித்தார்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரும், மாநில மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலட்சுமி, மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் துரையப்பா, முத்துசெல்வி, புளியங்குடி நகர செயலாளர் பரமேசுவரன் பாண்டியன், வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சீமான் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக சென்று கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் நல்லதொரு எதிர்காலம் அனைவருக்கும் உண்டு. நானே ஆரம்பத்தில் இளம்பெண்கள் பாசறையின் வார்டு நிர்வாகியாக பணியாற்றி உள்ளேன். கட்சியில் இணையும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயமாக உண்டு.

தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் அதிக உறுப்பினர்களை சேர்த்து, கட்சியின் வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவன் எம்.எல்.ஏ. பேசுகையில், “அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரண தொண்டனும் மிகப்பெரிய பதவி அடையலாம். தமிழகத்தில் வேறு எந்த கட்சியிலும் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலையை அடைய முடியாது. எதிர் காலத்தில் மிக பெரிய அரசியல் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும். இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை அ.தி.மு.க. செய்துள்ளது. எனவே இளைஞர், இளம்பெண்கள் அதிக அளவில் அ.தி.மு.க. சேர்ந்து நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும்” என்றார்.

தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினராக சேர்வதற்கு உரிய படிவங்களை ஒன்றிய, நகர, பேருர், கழக நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதேபோல் சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் உள்ள தனியார் மண்டபம், இலவன்குளம் ரோடு, காயிதே மில்லத் தெரு, கவுரிசங்கர் தியேட்டர் ரோடு அருகே உள்ள சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடந்த அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆய்வு கூட்டத்திலும் அமைச்சர் ராஜலட்சுமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் நாளை முதல் ஓடும் - 174 நாட்களுக்கு பிறகு இயக்கம்
தமிழகத்தில் 174 நாட்களுக்கு பின்னர் ஆம்னி பஸ்கள் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியது.