மந்திரிசபை விரிவாக்கத்திற்கு மேலிடம் ஒப்புதல் அளிக்கும் டெல்லி பயணம் வெற்றி பெற்றுள்ளது முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
மந்திரிசபை விரிவாக்கத்திற்கு மேலிடம் ஒப்புதல் அளிக்கும் என்றும், டெல்லி பயணம் வெற்றி பெற்றுள்ளதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி பெறவும், மழை மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கவும் முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசி இருந்தார்.
மேலும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பல்வேறு மத்திய மந்திரிகளை சந்தித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த நிலையில், டெல்லி பயணத்தை முடித்துவிட்டு நேற்று அவர் பெங்களூருவுக்கு திரும்பினார். முன்னதாக டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசி ஆலோசனை நடத்தினேன். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநில வளர்ச்சி பணிகள் மற்றும் மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும் பேசி இருந்தேன். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தி மந்திரிசபை விரிவாக்கம் செய்வது குறித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு கட்சி மேலிடம் ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக மந்திரிசபை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த சந்திப்பின் போது வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக பேசினேன். வளர்ச்சி பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிரதமரும் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் கோரிக்கைகளுக்கு கூடிய விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்கும். மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கும்படி மத்திய மந்திரிகளை சந்தித்தும் கோரிக்கை வைத்துள்ளேன். அவர்களும் வளர்ச்சி பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளனர். மொத்தத்தில் என்னுடைய டெல்லி பயணம் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story