புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 20 Sept 2020 4:55 AM IST (Updated: 20 Sept 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, மரகதவல்லி தாயார், வீரநாராயணபெருமாள் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட 7 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் துளசி இலையை கொண்டு மாலை மற்றும் மலர்களால் அலங்கரித்து பெருமாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.

வெப்ப நிலை பரிசோதனை

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசனம் செய்தனர். முன்னதாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவில் பணியாளர்கள், பக்தர்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளித்தனர்.

நிகழ்ச்சியில் மீன்சுருட்டி, கங்கைகொண்டசோழபுரம், உட்கோட்டை, ஜெயங்கொண்டம், மாளிகைமேடு, ஆமனக்கந்தோண்டி, கடாரங்ககொண்டான் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story