ஊத்துக்கோட்டையில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கன மழை நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கன மழையால் சிறு குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதன் பலனாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இப்படி அடிக்கடி மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களை உழுது விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இவ்வாறு பெய்த கனமழை நேற்று காலை வரை நீடித்தது. இதன் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மின்சாரமின்றி பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் தடுப்பு அணைகள், சிறு குளங்கள், நிரம்பி வருகின்றன. சில கண்மாய்களில் மழை நீர் பெறுக்கெடுத்து ஓடுகிறது.
ஊத்துக்கோட்டை அடுத்து பிச்சாட்டூர் அருகே உள்ள சிவகிரி பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது. இதிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அங்குள்ள தாரைப்பாலம் வழியாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டபள்ளியில் உள்ள தடுப்பு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீர் வந்து சேர்ந்தால் வறண்டு கிடக்கும் சுருட்டபள்ளி தடுப்பு அணையில் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இந்த தடுப்பணை முழுவதுமாக நிரம்பினால் ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் வறண்டு கிடக்கும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக சித்தூர் மாவட்டம் டி.பி.கோட்டை காட்டுப்பகுதியில் உள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக டி.பி.பாளையத்தில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாராட்சி, பாலவாக்கம், தண்டலம், சீதஞ்சேரி, காரணி, நாகலாபுரம், பிச்சாட்டூார் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

Related Tags :
Next Story