கொளத்தூர் அருகே காவிரி நீர்த்தேக்க பகுதி பச்சை நிறமாக மாறியது


கொளத்தூர் அருகே காவிரி நீர்த்தேக்க பகுதி பச்சை நிறமாக மாறியது
x
தினத்தந்தி 20 Sep 2020 3:37 AM GMT (Updated: 20 Sep 2020 3:37 AM GMT)

கொளத்தூர் அருகே காவிரி நீர்த்தேக்க பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.

கொளத்தூர்,

கொளத்தூர் அருகே மேட்டூர் அணையின் காவிரி கரையோரத்தையொட்டி அமைந்துள்ளது கிழக்கு காவேரிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் காவேரிபுரத்தையொட்டி உள்ள நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது.

இதனால் அந்த நீர்த்தேக்க பகுதி பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடி தொழிலுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பச்சை நிறமாக மாறி உள்ள தண்ணீரை கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

கிருமி நாசினி

கடந்த சில மாதங்களுக்கு இதே போன்று காவிரி கரையோர கிராமங்களில் தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் மேட்டூர் வேளாண்மைதுறை மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் மூலம் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்பட்டது. அதே போல இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து துர்நாற்றம் வீசுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story