துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் - உறவினர்கள் கோரிக்கை


துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் - உறவினர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 21 Sept 2020 4:30 AM IST (Updated: 21 Sept 2020 12:18 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கல்வத்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த, படுகாயம் அடைந்த, உடல் உறுப்புகள் இழந்தவர்களின் உறவினர்கள் வனிதா, பாஸ்கிளின் உள்ளிட்டவர்கள் லெவிஞ்சிபுரத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகு, அரசு நிவாரணங்கள் வழங்கியது. ஆனால் அதனை ஏற்க மறுத்தோம். அப்போது அரசு எங்களை சமாதானம் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலை வழங்குவதாக தெரிவித்தது. அதன்பிறகு அரசின் கடைநிலை ஊழியர் வேலையை வழங்கி உள்ளனர். வேறு சில சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசின் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

ஆகையால் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், இறந்த போராளிகளுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனால் முதல்-அமைச்சர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவர் தூத்துக்குடிக்கு வரும் போது, எங்களையும் சந்தித்து பேசி எங்கள் கோரிக்கைகளை கேட்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story