பா.ஜனதா மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவாருக்கு கொரோனா


பா.ஜனதா மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Sept 2020 5:10 AM IST (Updated: 21 Sept 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டிய பாரதீய ஜனதா மூத்த தலைவராக இருந்து வருபவர் சுதீர் முங்கண்டிவார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், “சனிக்கிழமை மாலை எனக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து நான் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்“ என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான 58 வயது சுதீர் முங்கண்டிவார் பல்லர்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அவர் நிதி மற்றும் வனத்துறை மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story