பள்ளிப்பட்டில் வெள்ளத்தில் சிக்கினால் மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம்


பள்ளிப்பட்டில் வெள்ளத்தில் சிக்கினால் மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம்
x
தினத்தந்தி 21 Sept 2020 5:50 AM IST (Updated: 21 Sept 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

மழைக்கால பேரிடர் நேரங்களில் வெள்ளத்தில் சிக்கினால் காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு அருகே கரிம்பேடு சின்னநாகபூண்டி கோவில் குளத்தில் மழைக்கால பேரிடர் நேரங்களில் வெள்ளத்தில் சிக்கினால் காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வடகிழக்கு பருவமழைக்காலம் நெருங்கி வருவதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் கரிம்பேடு நாதாலீஸ்வரர் கோவில் குளத்தில் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கினால் மீட்பது குறித்த விளக்கப் பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிப்பட்டு தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

அப்போது, பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய அதிகாரி பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் பேராபத்தில் சிக்கி கொண்டால் மீட்பது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சின்ன நாகபூண்டி கிராமத்தில் உள்ள நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரர் கோவில் குளத்திலும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் திருத்தணி ஆர்.டி.ஓ.சத்யா, ஆர்.கே.பேட்டை தாசில்தார் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story