கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு தேர்வு தொடங்கியது
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு நேற்று தேர்வு தொடங்கியது.
நெல்லை,
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலை அடுத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பள்ளியில் அரையாண்டு தேர்வு மற்றும் ஏனைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை.
இந்த நிலையில் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி (அதாவது நேற்று) தேர்வு தொடங்கும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு தேர்வு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டது. அந்த தேர்வு மையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் தேர்வு தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 994 பேரும், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வை 1,141 பேரும் எழுதினார்கள். தேர்வு மையத்தில் 10 பேர் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கூடத்திற்கு வரும் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களும், தேர்வு மைய கண்காணிப்பாளர்களும் முககவசம் அணிந்து இருந்தனர்.இந்த தேர்வுகளை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் காப்பி அடிப்பதை தவிர்க்க பறக்கும் படையினர் தேர்வு மையத்தை கண்காணித்தனர்.
இதேபோல் நேற்று நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்திலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது.

Related Tags :
Next Story