அனைத்து நிலையிலும் சிறந்த தலைவராக திகழ்ந்தார் பிரணாப் முகர்ஜிக்கு டி.கே.சிவக்குமார் புகழாரம்
அனைத்து நிலையிலும் சிறந்த தலைவராக திகழ்ந்தார் என்று பிரணாப் முகர்ஜிக்கு டி.கே.சிவக்குமார் புகழாரம் சூட்டினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீது முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
சிறப்புமிக்க தலைவர் பிரணாப் முகர்ஜி அரசியலில் 50 ஆண்டுகள் காலம் சேவையாற்றினார். அவர் ஒரு பெரிய தலைவர். மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்று செயல்பட்ட அவர், அனைத்து நிலையிலும் ஒரு சிறந்த தலைவராக திகழ்ந்தார். நாட்டின் வரலாறு, அரசியல் அமைப்பு மற்றும் சட்டம் குறித்த விஷயத்தில் அபாரமான அறிவாற்றல் கொண்டிருந்தார். நிதி, ராணுவம், வணிகம் மற்றும் வெளியுறவு உள்ளிட்ட துறைகளை வெற்றிகரமாக நிர்வகித்தார்.
அதன் பிறகு அவர் நாட்டின் 13-வது ஜனாதிபதியாக பணியாற்றினார். இவையெல்லாம் அவரது சாதனைக்கு சாட்சி ஆகும். தான் ஒரு ஆசிரியராக பணியாற்றினால் போதும் என்று நினைத்த அவர், ஜனாதிபதி பதவி வரைக்கும் உயர்ந்தார். இதற்கு அவரது அர்ப்பணிப்பு, உழைப்பு, திறன் ஆகியவையே காரணம். நாட்டை காக்கும் விஷயத்தில் அவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். அவர் எப்போதும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளவில்லை. இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

Related Tags :
Next Story