நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை தேவேந்திர பட்னாவிஸ் சொல்கிறார்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை விவசாயிகள் யாரும் எதிர்க்கவில்லை என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
நாக்பூர்,
நாடாளுமன்றத்தில் மழைக் கால கூட்டத்தொடர் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் விவசாய விளை பொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கும், அமளிக்கும் மத்தியில் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. மாறாக சொந்த நலனுக்காக போராடும் சிலர் மட்டுமே இதை எதிர்க்கின்றனர். பல அரசியல் தலைவர்கள் தங்கள் இருப்பை காட்டிக்கொள்வதற்காகவே இந்த மசோதாக்களுக்கு எதிராக போராடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அதை நரேந்திர மோடி அரசு தான் நிறைவேற்றி உள்ளது.
நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் ஒப்பந்த வேளாண்மையில் ஈடுபட வழிவகுக்கிறது. மேலும் இத்துறையில் முதலீட்டை ஈர்க்கிறது. பல்வேறு வரிகள் மற்றும் செலவுகளை குறைப்பதால் விவசாயிகள் மீதான சுமை குறைகிறது.
விவசாயிகள் தற்போது எந்த செலவோ அல்லது வரியோ செலுத்தாமல் தங்கள் விருப்பப்படி விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் மராட்டிய சிவசேனா அரசை தாக்கிய பேசிய அவர், “மராட்டியத்தில் ஆளும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அரசுக்கு விவசாயத்துறையில் எந்த நிலைபாடும் இல்லை. விவசாயிகளின் கோரிக்கை மற்றும் உரிமைகள் குறித்த விஷயத்தில் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்” என்றார்.

Related Tags :
Next Story