கரூரில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கான பரீட்சை தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கான பரீட்சை நேற்று தொடங்கியது.
கரூர்,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் மூடப்பட்டதால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நேற்று முதல் தேர்வு தொடங்கியது.
எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான தேர்வு நேற்று கரூர் மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெற்றது. நேற்று தமிழ் பாடத்தேர்வு நடைபெற்றது. தேர்வர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முக கவசம் அணிந்திருந்தனர். சமூக இடைவெளியோடு தேர்வை தேர்வர்கள் எழுதினர். இத்தேர்வை எழுத விண்ணப்பித்திருந்த 330 பேரில் 270 பேர் எழுதினர்.
பிளஸ்-2
இதேபோல பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் தேர்வெழுதாதவர்களுக்கு உடனடி தேர்வு நேற்று தொடங்கியது. கரூர் மாவட்டத்தில் 5 மையங்களில் 60 பேரில் 44 பேர் தேர்வெழுதினர். மொத்தம் நேற்று தொடங்கிய தனித்தேர்வுகளை 314 பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது. தேர்வு மையங்களை கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Tags :
Next Story