மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது + "||" + Three people, including her husband, have been arrested for allegedly inciting a woman to commit suicide by hanging

தூக்குப்போட்டு பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது

தூக்குப்போட்டு பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேர் கைது
பேரளம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வாதண்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பானுசந்தர் (வயது34). காய்கறி வியாபாரி. இவருக்கும் கும்பகோணம் சீனிவாசநல்லூர் தென்றல் நகரை சேர்ந்த ராதா (28) என்பவருக்கும் திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.


இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து ராதாவின் தாயார் மகேஸ்வரி பேரளம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சாவில் சந்தேகம்

அதில் தனது மகள் ராதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகேஸ்வரி கூறி இருந்தார்.

புகாரின் பேரில் பேரளம் போலீசார் முதல் கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப தகராறில் ராதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் பானுசந்தர், பானுசந்தரின் அக்காள் சுசீதா (35), தாயார் சந்திரா (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசார் ராதாவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளி வாலிபர் சாவு; 4 பேருக்கு சிகிச்சை
பெங்களூருவில் சாலையில் நடந்து சென்ற 5 பேரின் வயிற்றில், சரமாரியாக கத்தியால் தொழிலாளி ஒருவர் குத்தினார். இதில் வாலிபர் ஒருவர் இறந்தார். 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீர் சாவு
அம்பை அருகே ஊருக்குள் புகுந்த யானை திடீரென்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பெண் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்: ‘ஆசைக்கு இணங்க மறுத்ததால் கற்பழித்து கொன்றேன்’ கைதான உறவினர் வாக்குமூலம்
பெரியபாளையம் அருகே பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டார். ஆசைக்கு இணங்க மறுத்ததால் கற்பழித்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
4. தூத்துக்குடியில் பயங்கரம்: மோட்டார் சைக்கிளுக்கு வைத்த தீயால் வீடு பற்றி எரிந்தது; மெக்கானிக் சாவு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளுக்கு தொழிலாளி வைத்த தீயால் வீடு பற்றி எரிந்தது. இதில் மூச்சுத்திணறி மெக்கானிக் பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தான்.
5. ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் மீது புகார்: டி.ஜி.பி. அலுவலகம் முன் குழந்தையுடன் பெண் திடீர் போராட்டம்
ஐ.ஆர்.பி.என். போலீஸ் காரர் மீது புகார் தெரிவித்து டி.ஜி.பி. அலுவலகம் முன் குழந்தையுடன் பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.