சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்தது


சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்தது
x
தினத்தந்தி 22 Sept 2020 8:32 AM IST (Updated: 22 Sept 2020 8:49 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ. 84.14-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ. 84.14-க்கும், டீசல் விலை 13 காசுகள் குறைந்து லிட்டர் ரூ. 76.72-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Next Story