மானாமதுரை அருகே மணல் திருட்டு: நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் விவசாயம் பாதிப்பு
மானாமதுரை அருகே வைகையாற்றில் இரவு நேரங்களில் விடிய, விடிய மணல் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மானாமதுரை,

மணல் கொள்ளை
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, இளையான்குடி, கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ஆற்று மணல் கடத்துவதாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதில் மானாமதுரை பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் திருட்டு சம்பவம் நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரையை அடுத்த கல்குறிச்சி கிராமத்தின் வழியாக செல்லும் வைகையாற்று பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதனால் வைகையாற்று பகுதியில் ஆங்காங்கே பெரிய பள்ளம் காணப்பட்டு மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதவிர வைகையாற்று பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் இந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், மழைக்காலங்களில் கண்மாய்களுக்கு செல்லும் தண்ணீர் வரத்தும் முற்றிலும் குறைந்து விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
நடவடிக்கை
இதுகுறித்து கல்குறிச்சி பகுதி கிராம மக்கள் கூறியதாவது:- கல்குறிச்சி கிராமத்தையொட்டி செல்லும் வைகையாற்று பகுதியில் இரவு நேரங்களில் சமீப காலமாக லாரிகளில் மணல் கொள்ளை விடிய, விடிய நடந்து வருகிறது. இதுதவிர பகல் நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் மணலை அள்ளி மூடையாக கட்டி எடுத்து செல்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்லும் மணல் மூடையை ரூ.100-க்கு விற்பனை செய்கின்றனர். மேலும் இந்த பகுதியில் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடப்பதால் ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் அதில் தண்ணீர் தேங்கி பெரிய விபத்து சம்பவம் ஏற்படவும் உள்ளது.
இதுதவிர தொடர் மணல் கொள்ளையால் இந்த பகுதியில் தற்போது நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க நீதிமன்றம் சமீபத்தில் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் கூட இந்த பகுதியில் மணல் கொள்ளை சம்பவம் நடப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் மற்றும் மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து இயற்கை வளங்களை காப்பாற்ற முன் வரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story