சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 கடைகளுக்கு அபராதம்


சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 Sept 2020 9:15 AM IST (Updated: 22 Sept 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மற்றும் சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தரராஜ் அறிவுரையின்படி, மண்டபம் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் மண்டபம் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முனியசாமி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் மண்டபம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அபராதம்

அப்போது முககவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story