மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க நீலகிரியில் 280 நிவாரண முகாம்கள் தயார் கலெக்டர் தகவல்
நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 280 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக குந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. மழையுடன் சூறாவளி காற்று வீசுவதால் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம். அபாயகரமான மரங்கள் மற்றும் பழுதடைந்த வீடுகள் குறித்து கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும். வீடு அபாயகரமாக இருப்பதை உணர்ந்தால் மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வர வேண்டும். அபாயகரமான இடங்களில் முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் இருந்து, அப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
45 குழுக்கள் அமைப்பு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க மாவட்டம் முழுவதும் 280 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மிகவும் அபாயகரமான இடங்களை கண்காணிக்க அலுவலர்கள் அடங்கிய 45 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story