மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர் + "||" + In Chidambaram, students who had written the exam online gathered at the post office to send their farewells

சிதம்பரத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்

சிதம்பரத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்
சிதம்பரத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாளை அனுப்ப தபால் நிலையத்தில் குவிந்தனர்.
அண்ணாமலைநகர்,

தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் இறுதி பருவத்தேர்வுகளை நடத்திக்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவள்ளுவர், காமராஜர், அண்ணா போன்ற பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆன்-லைன் மூலம் தேர்வு எழுதி, அந்த விடைத்தாளை விரைவு தபால் மூலம் அனுப்பி வருகின்றனர். சிலர் கல்லூரிக்கே நேரில் சென்று தேர்வு எழுதி விடைத்தாளை கல்லூரி ஆசிரியர்களிடம் வழங்கினர்.


விரைவு தபால்

இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இறுதி பருவ தேர்வு நேற்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தேர்வு நடந்தது. இதேபோல் மற்ற பல்கலைக்கழகங்களில் படிக்கும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் நேற்று தேர்வு எழுதினர். பின்னர் அவர்கள் தேர்வு எழுதி விடைத்தாளை விரைவு தபால் மூலம் அனுப்புவதற்காக சிதம்பரம் தபால் நிலையத்தில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விரைவு தபால் அனுப்பி சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான தேர்வு தொடங்கியது புதுக்கோட்டையில் 262 பேர் எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான தேர்வு தொடங்கியது. புதுக்கோட்டையில் 262 பேர் எழுதினர்.
2. செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர சாத்தியக்கூறு இல்லை - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர சாத்தியக்கூறு இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
3. கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வு தொடங்கியது 1.94 லட்சம் மாணவர்கள் எழுதினர்
கொரோனா பரவலுக்கு மத்தியில் கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. தேர்வு நேற்று தொடங்கியது. 1.94 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
4. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்த நிலையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
5. ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை
ஹாங்காங்கில் மாணவர்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.