நாகர்கோவிலில், கொட்டும் மழையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில், கொட்டும் மழையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2020 10:15 PM GMT (Updated: 22 Sep 2020 8:39 PM GMT)

நாகர்கோவிலில் கொட்டும் மழையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாகர்கோவில், 

வக்கீல்கள் உரிமை மற்றும் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், வக்கீல்கள் விரோத போக்கு மற்றும் நீதிக்கு எதிரான செயல்களை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு நேற்று வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ், பொருளாளர் விஸ்வராஜன், துணை தலைவர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இணை செயலாளர் பெருமாள், ஞானசீலன், ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த போது மழை கொட்டியது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தக்கலையில் பத்மநாபபுரம் கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் சுந்தர்சிங் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெகதேவ், உதவி செயலாளர் ராபின்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏசுராஜா, ராஜேஸ்வர், ஏசுதாஸ், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். குழித்துறை கோர்ட்டில் சுரேஷ் தலைமையிலும், இரணியலில் போஸ் மற்றும் பூதப்பாண்டியில் கென்னடி ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Next Story