பள்ளிக்கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்டுக்கு கொரோனா


பள்ளிக்கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட்டுக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Sept 2020 4:26 AM IST (Updated: 23 Sept 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ள கொரோனா வைரஸ் மந்திரிகளையும் விடாமல் துரத்தி வருகிறது. மந்திரிகள் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மந்திரிகள் அசோக் சவான், ஜித்தேந்திர அவாத், தனஞ்செய் முண்டே, அஸ்லாம் சேக் உள்பட 11 மந்திரிகள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தாராவி எம்.எல்.ஏ.வும், பள்ளி கல்வித்துறை மந்திரியுமான வர்ஷா கெய்க்வாட் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை அவர் டுவிட்டரில் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

இன்று(நேற்று) நடந்த பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உங்களின் ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துகளால் நலமுடன் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கவனமாக இருந்து, அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாநிலத்தில் இந்த மாதத்தில் தொற்றால் பாதிக்கப்படும் 5-வது மந்திரி வர்ஷா ஆவார். இந்த மாதத்தில் ஏற்கனவே மந்திரிகள் பச்சு கதம், நிதின் ராவத், விஸ்வஜித் கதம், சுனில் கேதார் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். வர்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் மூலம் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட மந்திரிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story