எடப்பாடி பழனிசாமிக்கு மானாமதுரையில் உற்சாக வரவேற்பு


எடப்பாடி பழனிசாமிக்கு மானாமதுரையில் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 23 Sept 2020 4:15 AM IST (Updated: 23 Sept 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஏற்பாட்டின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மானாமதுரை, 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனம், மானாமதுரை வழியாக காரில் சென்றார். மானா மதுரை பைபாஸ் சாலை வழியாக சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ஏற்பாட்டின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் மேள தாளத்துடனும், பெண்கள் மலர் தூவியும் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜயகுமார், மானாமதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன் என்ற சிவசிவ, இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ்வரன் உள்பட நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சோலை ரவி, கணேசன், வக்கீல் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் அழகுமலை, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச்செயலாளர் புவனேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணைச்செயலாளர் செல்வராஜ், வயல்சேரி ராமகிருஷ்ணன், நகர செயலாளர் நாகரத்தினம், மோகனசுந்தரம், ஜெயபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பால்உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவரும் ஆவின் சேர்மனுமான கே.ஆர். அசோகன், துணைத்தலைவர் நாகநாதசேதுபதி ஆகியோர் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக சிவகங்கை மாவட்ட எல்லையான மணலூர் அருகே மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துகழுவன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். நிகழ்ச்சியில் திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், திருப்புவனம் யூனியன் ஆணையாளர் ரெத்தினவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story