புதுச்சேரி அரசு செயலாளர் அன்பரசுக்கு கொரோனா
புதுவை அரசு செயலாளர் அன்பரசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுவை அரசின் கல்வித்துறை செயலாளராக இருப்பவர் அன்பரசு. இவர் வளர்ச்சி ஆணையராகவும், கொரோனா நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ஆணையராகவும் உள்ளார். இவருக்கு கொரோனா அறிகுறி தெரியவே சோதனை மேற்கொண்டார். முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் அரசு செயலாளர்கள், அதிகாரிகளுடன் அரசு செயலாளர் அன்பரசு பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ.
இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Tags :
Next Story