மாவட்ட செய்திகள்

பெட்ரோல் திருட முயன்ற போது நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து சாம்பல் வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Police nabbed a gray teenager whose motorcycles caught fire at midnight while trying to steal petrol

பெட்ரோல் திருட முயன்ற போது நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து சாம்பல் வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

பெட்ரோல் திருட முயன்ற போது நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து சாம்பல் வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் பகுதியில் பெட்ரோல் திருட முயன்றபோது மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து சாம்பலாயின. காரும் சேதமடைந்தது.
புதுச்சேரி,

புதுவை ஈஸ்வரன்கோவில் வீதி- ஆம்பூர் சாலை சந்திப்பில் வசிப்பவர் விமல். ஆசிரம ஊழியர். இவர் வீட்டின் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருட முயன்றுள்ளார். அப்போது திடீரென தீப்பிடித்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.


இந்தநிலையில் மளமள வென்று தீப்பிடித்ததில் 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்தன. அருகில் வக்கீல் கங்காதரன் என்பவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரிலும் தீப்பிடித்தது. நள்ளிரவில் கார், மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர் களும், வாகனங்களின் உரிமை யாளர்களும் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாயின. காரின் பின் பகுதி சேதமடைந்து இருந்தது.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்து பெரியகடை போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடு பட்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா வில் பதிவாகி இருந்த காட்சி களை ஆய்வு செய்தனர். அதில், சம்பவ இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வாலி பர் ஒருவர் வந்ததும் பெட் ரோல் திருடும் முயற்சியின் போது அந்த ஆசாமியால் தீவிபத்து நடந்தது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதுதொடர்பாக பெரிய கடை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகன் தலைமை யிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மோட் டார் சைக்கிள்களில் பெட் ரோல் திருட வந்த ஆசாமி யார்? அங்கிருந்த வாகனங் களில் தீப்பிடித்தது எப்படி? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் திருட முயன்ற போது கார், மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஈஸ்வரன் கோவில் வீதி- ஆம்பூர் சாலை யில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக ரூ.20 கோடி மோசடி பெண் கைது; வங்கி அதிகாரிக்கு வலைவீச்சு
மண்டியாவில் நகைகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.20 கோடி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வங்கி ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. 82 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயற்சி டிப்-டாப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் நடித்து 82 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற டிப்-டாப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
3. தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நெட்டப்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. இரும்பு கம்பியால் தாக்கி சிறுவன் படுகொலை தலைமறைவான சகோதரருக்கு போலீஸ் வலைவீச்சு
பெங்களூரு அருகே இரும்பு கம்பியால் தாக்கி சிறுவனை படுகொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான சகோதரரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
5. ஸ்ரீவைகுண்டத்தில் மினிலாரியுடன் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை
ஸ்ரீவைகுண்டத்தில் மினிலாரியுடன் 21 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் போலீசார் விசாரணை.