திருநள்ளாறில் திறந்தவெளி ‘பார்’ ஆன அரசு பெட்ரோல் பங்க்
திருநள்ளாறில் மூடப்பட்ட அரசு பெட்ரோல் பங்க் திறந்தவெளி மதுபான பார் ஆக மாறியுள்ளது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் அரசு சார்பில் 3 கான்பெட் பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பங்க்குகள் லாபத்தில் இயங்கி வந்தன. இதேபோன்ற பெட்ரோல் பங்குகள் புதுச்சேரியில் நஷ்டம் அடைந்ததால், ஒட்டுமொத்த பெட்ரோல் பங்குகளையும் கடந்த 8 மாதங்களுக்கு முன் அரசு மூடியது. இதனால் காரைக்கால் பகுதியில் உள்ள 3 பங்க்கு களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
கொரோனா காரணமாக தற்போது மதுபான பார்கள் மூடப்பட்டுள்ளதால் திருநள்ளாறு பெட்ரோல் பங்க்கில் வந்து அமர்ந்து மது குடிப்பதன் மூலம் திறந்தவெளி பார் ஆக மதுபிரியர்கள் மாற்றியுள்ளனர்.
காலி மதுபாட்டில்கள்
இதற்கு சான்றாக திருநள்ளாறில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மதுபிரியர்கள் குடித்து விட்டு வீசி எறிந்த மதுபாட்டில்கள் நிரம்பி வழிகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் உத்தரவின் பேரில், காரைக்கால் பகுதியில் பொது இடங்களில் மது குடித்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்தபோதிலும், பெட்ரோல் பங்கில் மது குடிப்பது தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story