மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை சுகாதார துறை செயலாளர் தகவல் + "||" + No chance of extending curfew again in Tamil Nadu

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை சுகாதார துறை செயலாளர் தகவல்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை சுகாதார துறை செயலாளர் தகவல்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். திருத்தணி பஸ்நிலையம், முருகன் கோவில், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். திருத்தணி பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் முக கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மீண்டும் ஊரடங்கு உத்தரவு

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து வருகின்றனர். அது பொதுமக்கள் உபயோகத்திற்கு வர இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும். தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகர், தாசில்தார் உமா உள்பட பலர் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விரைவில் அனைவருக்கும் மின்சார ரெயிலில் அனுமதி மந்திரி விஜய் வடேடிவார் தகவல்
மும்பையில் விரைவில் அனைவரும் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என மந்திரி விஜய் வடேடிவார் கூறினார்.
2. அனுமதி பெறாத மனைகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தகவல்
அனுமதி பெறாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படாது என தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
3. இணையதளம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஷில்பா தகவல்
இணையதளம் மூலம் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
4. கர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
கர்நாடகத்தில் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாளில் முடிவு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பாடத்திட்டங்களை குறைப்பது பற்றி 10 நாட்களில் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.