தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் வேளாண் மசோதா நகல் எரிப்பு போராட்டம்
தென்காசி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி,
மத்திய அரசு வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இதனை கண்டித்து தென்காசி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் திடீரென சட்ட மசோதா நகல்களை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அலுவலகத்திற்குள் செல்லாத வகையில் தடுத்து வெளியேற்றினர். தெற்கு மாவட்ட செயலாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வக்கீல் அணி செயலாளர் வள்ளுவ செல்வன் முன்னிலை வகித்தார். மாநில இளம்புலிகள் அணி செயலாளர் தமிழ்வேந்தன், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் இளஞ்சூரியன், மாவட்ட இளம்புலிகள் அணி விஜயன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்குமரன், விஜயகுமார், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story