தூத்துக்குடி மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் இடமாற்றம்


தூத்துக்குடி மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 23 Sept 2020 10:00 AM IST (Updated: 23 Sept 2020 10:00 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 26 தாசில்தார்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை, தூத்துக்குடி தாசில்தாராகவும், திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு பிரிவு-5 தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராகவும், திருச்செந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேசன், திருச்செந்தூர் தாசில்தாராகவும், இஸ்ரோ நில எடுப்பு பிரிவு-2 தனி தாசில்தார் லட்சுமி கணேஷ், சாத்தான்குளம் தாசில்தாராகவும், தனி தாசில்தார் (முத்திரை) இசக்கி ராஜ், ஏரல் தாசில்தாராகவும்,

விளாத்திகுளம்

விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்து, ஓட்டப்பிடாரம் தாசில்தாராகவும், கோவில்பட்டி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, விளாத்திகுளம் தாசில்தாராகவும், கயத்தாறு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அய்யப்பன், எட்டயபுரம் தாசில்தாராகவும், தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார், கயத்தாறு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலராகவும், திருச்செந்தூர் தாசில்தார் ஞானராஜ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பறக்கும்படை தனி தாசில்தாராகவும், சாத்தான்குளம் தனி தாசில்தார் ராஜலட்சுமி, இஸ்ரோ நில எடுப்பு பிரிவு-2, தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஏரல் தாசில்தார் அற்புத மணி, இஸ்ரோ நில எடுப்பு பிரிவு-5 தனி தாசில்தாராகவும், ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, தேர்தல் பிரிவு தனி தாசில்தாராகவும், விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், கோவில்பட்டி நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், எட்டயபுரம் தாசில்தார் அழகர் தூத்துக்குடி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் நம்பிராயர், தூத்துக்குடி நகர நிலவரி திட்ட தனி தாசில்தாராகவும், கோவில்பட்டி நகர நிலவரித் திட்ட தனி தாசில்தார் முருகானந்தம், கோவில்பட்டி உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பறக்கும் படை

தூத்துக்குடி நகர நிலவரி திட்ட தாசில்தார் ராமச்சந்திரன், திருச்செந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை நேர்முக உதவியாளர் விசுவநாதன், தூத்துக்குடி டாஸ்மாக் உதவி மேலாளராகவும், தூத்துக்குடி டாஸ்மாக் உதவி மேலாளர் வள்ளிக்கண்ணு, கோவில்பட்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலர் செல்லபாண்டியன், விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கோவில்பட்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மல்லிகா, கோவில்பட்டி கோட்ட கலால் அலுவலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு பறக்கும் படை தாசில்தார் நல்லசிவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்துராமலிங்கம் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் லிங்கராஜ், ஏரல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணை தாசில்தாராக பணியாற்றி வரும் 24 பேரும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story