ஜெயங்கொண்டம் அருகே, மாட்டுக்கொட்டகையில் தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி மாணவர் - போலீசார் விசாரணை


ஜெயங்கொண்டம் அருகே, மாட்டுக்கொட்டகையில் தூக்கில் பிணமாக தொங்கிய பள்ளி மாணவர் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Sept 2020 3:15 PM IST (Updated: 23 Sept 2020 3:57 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே மாட்டுக்கொட்டகையில் தூக்குப்போட்ட நிலையில் பள்ளி மாணவர் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் ராஜேஷ்(வயது 12). இவர் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று, எட்டாம் வகுப்புக்கு செல்ல உள்ளார்.

இந்நிலையில் ராஜேஷ் நேற்று காலை திடீரென வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story