மாவட்ட செய்திகள்

அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு + "||" + Public protest against opening of Tasmac stores in Aranthangi

அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
அறந்தாங்கியில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை.
அறந்தாங்கி,

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லவாரியில் அரசு மதுபான கடை(டாஸ்மாக்) நேற்று திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசீலன், தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.


அப்போது, வல்லவாரி கிராமத்தில் சமாதான கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றும், அதுவரை டாஸ்மாக் கடையை மூடுவது என்றும் எடுத்துக் கூறினர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் 2 கடைகள்

இதேபோல, அறந்தாங்கியை அடுத்த நாகுடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை நேற்று திறக்க இருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திறக்கப்படவில்லை. அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி சாலையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதபூஜையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூஜைபொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
ஆயுதபூஜையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூஜைபொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
2. ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல்: கருப்புக்கொடிகள் கட்டி பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கோரி கருப்புக்கொடிகள் கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அம்பை அருகே கால்வாய் பகுதியில் வந்து நிற்கும் காட்டு யானை பொதுமக்கள் அச்சம்
அம்பை அருகே கால்வாய் பகுதியில் காட்டு யானை ஒன்று அடிக்கடி வந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
4. மதசார்பின்மைக்கு மாறி விட்டீர்களா என விமர்சித்து கடிதம் கவர்னருக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு
மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருக்கும் பிரச்சினையில், மதசார்பின்மைக்கு திடீரென மாறி விட்டீர்களா? என்று விமர்சித்து கவர்னர் எழுதிய கடிதத்துக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
5. அம்பை அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை உணவுப்பொருட்கள் வழங்க கோரிக்கை
அம்பை அருகே உணவுப்பொருட்கள் வழங்கக்கோரி, ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.