கரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று புன்செய் புகளூர் பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டது


கரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று புன்செய் புகளூர் பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டது
x
தினத்தந்தி 24 Sep 2020 2:19 AM GMT (Updated: 24 Sep 2020 2:19 AM GMT)

கரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புன்செய்புகளூர் பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவருக்கு தொற்று ஏற்பட்டதால் அலுவலகம் பூட்டப்பட்டத.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருமாநிலையூரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, வெண்ணைமலையை சேர்ந்த 68 வயது முதியவர், காளியப்பகவுண்டனூரை சேர்ந்த 62 வயது முதியவர், உப்பிடமங்கலத்தை சேர்ந்த 60 வயது முதியவர், கோயம்பள்ளியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, தாந்தோன்றிமலையை சேர்ந்த 65 வயது மூதாட்டி, 60 வயது முதியவர், கோவை ரோட்டை சேர்ந்த 65 வயது முதியவர், திருக்காம்புலியூரை சேர்ந்த 54 வயது ஆண், ஆண்டாங்கோவிலை 58 ஆண், வெள்ளகோவிலை சேர்ந்த 30 வயது பெண்.

30 பேருக்கு தொற்று

சின்னாண்டாங்கோவிலை சேர்ந்த 71 வயது முதியவர், பஞ்சப்பட்டியை 62 வயது மூதாட்டி, கே.வி.பி காலனியை சேர்ந்த 60 வயது முதியவர், ராயனூரை சேர்ந்த 50 வயது ஆண், பசுபதிபாளையத்தை சேர்ந்த 92 வயது முதியவர், கடவூரை சேர்ந்த 44 வயது ஆண், காந்தி நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி உள்பட 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டது

புன்செய்புகளூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி டிரைவர் 48 வயதுடைய ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டு, தற்காலிகமாக காந்திமண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் பேரூராட்சி டிரைவர் குடியிருந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story